மதுரை: களைகட்டிய பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மதுரை: களைகட்டிய பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
மதுரை: களைகட்டிய பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Published on

மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலயபட்டி கிராமத்தில் உள்ள பூத கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கம்பளியான் கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில், மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. புதன் கிழமையான இன்று மீன்பிடித் திருவிழா நடத்தப்படும் என சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பொதுமக்கள் கண்மாய் கரையில் காத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை கிராம பெரியவர்கள் அனுமதி அளித்தவுடன் ஒற்றுமையாக ஒருசேர சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பிடிக்கப்பட்ட மீன்களை சமைத்து இறைவனுக்குப் படைத்து விட்டு அதன்பின் பொதுமக்கள் சாப்பிடுவர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com