மதுரை | திமுக எம்எல்ஏ வீட்டின் தீக்குளித்த நிர்வாகி உயிரிழப்பு - எழுதிவைத்த உருக்கமான கடிதம்!

மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக தொழிற்சங்க நிர்வாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்..
விபரீத முடிவெடுமுத்த திமுக நிர்வாகி
விபரீத முடிவெடுமுத்த திமுக நிர்வாகிpt desk
Published on

செய்தியாளர்: மணிகண்ட பிரபு

மதுரை ஆவின் பால் பண்ணை திமுக தொழிற்சங்க கௌரவ தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் மானகிரி கணேசன் (73). இவர், நேற்று காலை பசுமலை அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில், பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைக்குச் சென்ற நீதித்துறை நடுவர் லட்சுமி, மானகிரி கணேசனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று மானகிரி கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உருக்கமான கடிதம்
உருக்கமான கடிதம்pt desk

நேற்று மானகிரி கணேசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி கையொப்பமிட்டிருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருந்தனர். அந்தத் கடிதத்தில் ”கடந்த ஆண்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தமிழக ஆளுநரை கண்டித்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது உடல் முழுவதிலும் மண்ணெண்ணேய் பட்டு கொப்பளங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். தன்னிடம் திமுக மாவட்ட செயலாளர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வேண்டாம் என சொல்லியிருந்தால் நான் தீக்குளித்திருக்க மாட்டேன்.

விபரீத முடிவெடுமுத்த திமுக நிர்வாகி
திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! மாணவர்கள் போராட்டம்!

ஆனால் அவர், எதுவும் சொல்லவில்லை. இதையெல்லாம் உண்மையா என்பதை ஒரு அமைச்சரை அனுப்பி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும், யாரும் நலம் விசாரிக்க வராத நிலையில் மனம் வெறுத்துப் போய் தன் நிலையை விளக்கி திமுக தலைமைக்கும், முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளேன். மேலும் தன் கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் கருணாநிதியின் சிலை முன்பாக தீக்குளித்து உயிரிழப்பேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் நேற்று அவர் கோ.தளபதி வீடு முன்பு தீக்குளித்த நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com