ஜல்லிக்கட்டு போட்டியில் சீர்திருத்தம் மற்றும் போட்டியை முறைப்படுத்தக்கோரி 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எருமை மாட்டை ஜல்லிக்கட்டு காளைபோல் அலங்கரித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவிழ்க்கக்கூடிய காளைகளுக்கு நிகராக டோக்கன் வழங்க வேண்டும், முதல்வர், துணை முதல்வர் சார்பில் வழங்கப்படும் பரிசுகளை வெற்றி பெற்ற காளைகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து காளைகளுக்கும் வழங்க வேண்டும், நாட்டின மாடுகளை தவிர கலப்பின மாடுகளை போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்க கூடாது.
அதேபோல நாட்டு இன மாடுகளை பாதுகாக்கவும், அவற்றின் சிறப்பு குறித்த தகவலை பாடப் புத்தகத்தில் இடம் பெற வைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற தமுக்கம் மைதானத்தில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழக்கும் வீரர்களுக்கு 3லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி எருமை மாட்டிற்கு மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு காளையைபோல் அலங்காரம் செய்து மாடுபிடி வீரர்கள் மனு அளித்தனர்.