மதுரை: 3 நாட்களாக குறையும் தினசரி கொரோனா பாதிப்பு; காலியாகும் மருத்துவமனை படுக்கைகள்

மதுரை: 3 நாட்களாக குறையும் தினசரி கொரோனா பாதிப்பு; காலியாகும் மருத்துவமனை படுக்கைகள்
மதுரை: 3 நாட்களாக குறையும் தினசரி கொரோனா பாதிப்பு; காலியாகும் மருத்துவமனை படுக்கைகள்
Published on

மதுரையில் கடந்த 3 தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவரும்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ இரண்டாவது அலையில் இதுவரை 43, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா பாதிப்பு 1,200 முதல் 1,500 வரை இருந்து வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 700க்கும் கீழாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 28 ஆம் தேதிவரை 1,300க்கும் அதிகமாக இருந்து வந்த தினசரி பாதிப்பு, 29 ஆம்தேதி 828 ஆக இருந்தது. 30-ஆம்தேதி 792 ஆகவும், 31-ஆம்தேதி 695 ஆகவும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இதேபோல் மதுரையில் குணமடைந்து திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து படுக்கைகள் காலியாகி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 1,100 சாதாரண மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளனது. அதேபோல் 34 கொரோனா சிகிச்சை மையங்களிலும் 1,839 படுக்கைகள் காலியாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com