திருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு? - சென்னை உயர்நீதிமன்றம்

திருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு? - சென்னை உயர்நீதிமன்றம்
திருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு? - சென்னை உயர்நீதிமன்றம்
Published on

கடனை திருப்பிச் செலுத்த தகுதியில்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்விக் கடனை மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தனக்கு கல்விக் கடன் அளிக்க வங்கி மறுப்பதாக கூறி தீபிகா என்ற நர்சிங் மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி தீபிகாவின் தந்தை ஏற்கனவே மற்றொரு பிள்ளைக்காக கல்விக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் உள்ளார் என்பதை சுட்டிக் காட்டினார். 

மேலும் நீதிபதி கூறுகையில், “கடனை திருப்பிச் செலுத்த தகுதியில்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்விக் கடனை மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு. அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதால் மக்கள் பணம் வீணாகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்பச் செலுத்த இயலுமா என வங்கிகள் ஆராய்ந்து கடன் வழங்க அவர்களுக்கு உரிமை உண்டு.

கடன் என்பது சிறியதோ, பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆராய்தல் சரியே. கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்கள் பின்னால் அலைவதை விட, முன்கூட்டியே யாருக்கு வழங்கலாம் என முடிவு செய்து வழங்குதல் சரி. 
அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது” என்றார்.

அத்தோடு, வங்கி விதிகளின்படி நர்சிங் மாணவர்களுக்கு கடன் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com