அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது - ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கில் உத்தரவு

விஜய தசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க தொடரப்பட்ட வழக்கில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புpt web
Published on

விஜய தசமியை முன்னிட்டு வரும் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அனுமதி கோரிய 58 இடங்களில் 52 இடங்களுக்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Madras High Court
Madras High Courtpt desk
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்த நிபந்தனையுடன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரத்தில் எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார் மேலும் குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி எனக் கூறி அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com