T.M.கிருஷ்ணாவுக்கு ‘M.S.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி’ விருது? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது
எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதுpt desk
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், “கடந்த 2004ல் எனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருகிறது.

tm krishna
tm krishnafile

மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசைக் கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுகிறது. அதில் வரும் டிசம்பரில் 98வது ஆண்டு விழாவில் பாடகர் டிஎம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பாடகர் டி.எம்.கிருஷ்ணா கூறிவரும் நிலையில், இந்த அறிவிப்பு எங்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது
“அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மோசமானவர்கள்” - அறநிலையத்துறை மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

பாடகர் டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக பல கருத்துக்களை, தன்னுடைய மலிவான விளம்பரத்துக்காக கூறி வருகிறார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படி மியூசிக் அகாடமி கௌரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருதும் வழங்க கூடாது என்று உள்ளது.

court order
court orderpt desk

எனவே, வரும் டிசம்பரில் நடைபெறும் 98வது ஆண்டு விழாவில், கிருஷ்ணாவுக்கு அந்த விருதை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, “விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. 2005 ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குகிறது. இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்திருந்தது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது
“அமித்ஷா பதவி விலக வேண்டும்” - வலியுறுத்திய காங்கிரஸ்; குவிக்கப்பட்ட பட்டாலியன் பாதுகாப்பு படையினர்!

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது. அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம்” என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com