``இனி அம்பேத்கருக்கு காவி துண்டோ விபூதி குங்குமமோ வைக்கமாட்டேன்”-அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்

``இனி அம்பேத்கருக்கு காவி துண்டோ விபூதி குங்குமமோ வைக்கமாட்டேன்”-அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்
``இனி அம்பேத்கருக்கு காவி துண்டோ விபூதி குங்குமமோ வைக்கமாட்டேன்”-அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்
Published on
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை காவித் தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த வழக்கறிஞர்கள், இன்று உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம்” என அவர் உத்தரவாதம் அளித்தார்.

மேலும், “அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கும் செயலோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைப்பதோ செய்ய மாட்டேன்” எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தியப் பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும், உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகரன் வழக்கை முடித்து வைத்தார்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த முயற்சித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரைத் தடுத்தனர். பின்னத் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி அடித்து ஒட்டியதற்கு கண்டனங்களை தெரிவித்ததுடன், அர்ஜூன் சம்பத் மற்றும் சங்க் பரிவார் அமைப்புகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அம்பேத்கர் சிலை இருந்த பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பியபடியே, அர்ஜூன் சம்பத் வெளியேறும்படி பின்தொடர்ந்து வந்தனர்.

வழக்கில் ஆஜராக அனுமதி சீட்டு பெற்று வந்துள்ள தன்னை ஏன் வெளியேற்றுகிறார்கள் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார். அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டிடம் வரை இந்து மக்கள் கட்சிக்கு எதிராகவும், அர்ஜூன் சம்பத்துக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள், அர்ஜூன் சம்பத் கிளம்பிய பின்னர் கலைந்து சென்றனர்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தரப்பில் அம்பேத்கர் காவி உடை அணிந்து, விபூதி குங்குமம் வைத்து இருப்பது போன்ற சுவரொட்டி ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு கடும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் ட.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com