சவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பளித்திருக்கிறார்” - 3வது நீதிபதி!

“நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு பாரபட்சமானது” என்று, சவுக்கு சங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன்
நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன்புதிய தலைமுறை
Published on

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தார்கள்.

நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன்
சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'இரண்டு நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல' என கடந்த வியாழன் அன்று தெரிவித்து இருந்தார்.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்puthiya thalaimurai

இந்நிலையில், 3 வது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வந்தபோது, அரசு தரப்பிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பாரபட்சமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன்
சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

மேலும், “எதிர்தரப்பினருக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில் இரண்டு தரப்பினருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கிய பிறகே வழக்கில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் சட்ட கல்லூரியின் அடிப்படை பாடம்.

நீதிபதி சுவாமிநாதன்
நீதிபதி சுவாமிநாதன்

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அனுகியதாலேயே, அரசின் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது என்பது ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

அவ்வாறு அவரை சிலர் அணுகி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அல்லது இது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அல்லது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சுவாமிநாதன் இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல் உத்தரவு பிறப்பித்தது பாரபட்சமானது” என குறிப்பிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்ட்விட்டர்

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதி கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றிய நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com