பெலிக்ஸ் கைது - முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்த பெலிக்ஸின் மனைவி!

பெண் காவலர்கள் குறிந்து அவதூறாக பேசிய வழக்கில், கைதான யூடியூபர் பெலிக்ஸின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரது மனைவி முதல்வரின் தனிப்பிரிவில் பெலிக்ஸை விடுவிக்க கோரி புகார் அளித்துள்ளார்.
யூடியூபர் பெலிக்ஸ் - அவரின் மனைவி
யூடியூபர் பெலிக்ஸ் - அவரின் மனைவிபுதிய தலைமுறை
Published on

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிப்பரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பெலிக்ஸ்
பெலிக்ஸ்

இதனால், தன்னை காவல்துறை கைது செய்யும் என்ற அச்சத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில், திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.

இந்நிலையில், இவர் கைது செய்வதற்கு முன்பே தாக்கல் செய்திருந்த முன்பிணைக்கோரிய மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விசாரித்தார்.

அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், ”பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே, இவர் முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இவரின்முன் ஜாமீனை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்தான், ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

பெலிக்ஸ் மனைவி
பெலிக்ஸ் மனைவி

அந்தமனுவில், “எனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்ட் த/பெ ஞானப்பிரகாசம் தற்பொழுது திருச்சி நடுவண் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார். கடந்த 10.05.2024 அன்று புதுதில்லியில் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, திருச்சி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்: 21/2024 வழக்கிற்காக 13.05.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு எனது கணவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

முதல் தலைமுறைப் பட்டதாரியான எனது கணவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஊடகத்துறையில் செயல்பட்டு வருகிறார். முன்னணி காட்சி ஊடகங்களான என்.டி.டி.வி, சன் நியூஸ், ஜி டிவி, பாலிமர் டிவி, சத்யம் தொலைக்காட்சி போன்றவற்றில் முதன்மை பொறுப்பு வகித்து பணியாற்றியுள்ளதோடு, 2013-ம் ஆண்டு முதல் 'ரெட்பிக்ஸ்' என்ற வலையொளி ஊடகத்தை துவங்கி சமூக அக்கறையோடும், ஊடக அறத்தோடும் சட்ட விதிகளுக்குட்பட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் 30.04.2024 அன்று ரெட்பிக்ஸ் ஊடகத்தில் சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில் காவல் துறையில் பணிபுரியும் பெண்களை இழிவாகப் பேசியுள்ளதாக சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்: 123/2024-ல் 03.05.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் சில இடங்களில் கூடுதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் பதிவான வழக்கில் எனது கணவருக்கு சாட்சிகளுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், எனது கணவர் மேற்படி சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த நெறியாளர் என்பதற்காக வழக்குகளில் உடன் வழக்காளியாக தொடர்ந்து சேர்க்கப்படுகிறார்.

யூடியூபர் பெலிக்ஸ் - அவரின் மனைவி
சென்னை | 6 வயது சிறுவனை கடித்த எதிர்வீட்டு வளர்ப்பு நாய்!

மேற்குறிப்பிட்ட நேர்காணலை எனது கணவர் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பதிவு செய்யவில்லை. காவல் துறை உயர் அதிகாரிகளையோ, பெண்களையோ இழிவு படுத்தும் எண்ணமும் எனது கணவருக்கு இல்லை.

பெலிக்ஸ் கைது
பெலிக்ஸ் கைது

எனது கணவர் தற்பொழுது சிறையிலிருந்து வரும் சூழ்நிலையில் அவரிடமிருந்து உரிய தகவலைப் பெற்று, ரெட்பிக்ஸ் ஊடகத்தில் மேலே குறிப்பிட்ட சவுக்கு சங்கர் நேர்காணலை பதிவேற்றம் செய்ததற்காக 15.05.2024 அன்று நான் ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளேன். தொடர்புடைய வலையொளி" காட்சியும் எங்கள் நிறுவனத்தால் நீக்கப்பட்டு விட்டது.

மேலும் வழக்கோடு பொதுத்தளத்திலிருந்து அமைதியான எங்கள் குடும்ப வாழ்வில் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எங்களது மூத்த மகள் ஜெர்மனியில் உயர்கல்வி படித்து வருகிறார். இளைய மகன் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார். எனது கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற உடலியல் பிரச்சனைகள் உள்ளன.

கடந்த 14.05.2024 அன்று எங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் நடத்தப்பட்ட சோதனையில் வழக்கோடு தொடர்பில்லாத எங்களது சொத்துகள் குறித்த அசல் ஆவணங்களும், ஊடகச் செயற்பாட்டிற்கு முதன்மையாகத் தேவைப்படும் நவிகள் புகைப்படக்கருருவிகள், கணிப்பொறிகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனால் நானும், எனது கணவரும். குடும்பத்தினரும், நிறுவனத்தினரும் பெருத்த மன உளைச்சலுக்கும், சொல்ல முடியாத வேதனைக்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ளோம். எங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

யூடியூபர் பெலிக்ஸ் - அவரின் மனைவி
"யூ-ட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது"- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

எனவே எனது இந்த முறையீட்டைக் கருணைகூர்ந்து பரிசீலித்து, ரெட்பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியரான எனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர் சிறையிலிருந்து விடுதலை பெற வழிவகை செய்து பேருதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com