ஆபாச விளம்பரங்களை அதிகரிக்கிறதா கூகுள்? விளக்கம் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் விளம்பரங்கள் - சென்னை உயர்நீதிமன்றம்
கூகுள் விளம்பரங்கள் - சென்னை உயர்நீதிமன்றம்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - சுப்பையா

கூகுள் இணையத்தில் ஆபாச வலைதளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், “இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் சில தவறான நபர்கள் ஆபாச இணைய தளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

google ads
google ads

இந்த வழக்கை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, கூகுள் நிறுவனமும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com