“நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை” - திமுக, அதிமுக மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

“ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக் கொண்டு திமுக - அதிமுக ஆகிய இரு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை” என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் - அதிமுக, திமுக
சென்னை உயர்நீதிமன்றம் - அதிமுக, திமுககோப்புப்படம்
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

மதுரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லூர் ராஜூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

sellur raju
sellur rajuகோப்புப்படம்

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. எனது கருத்தை மட்டுமே தெரிவித்தேன்” என செல்லூர் ராஜூ தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், “முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செல்லூர் ராஜூ பேசியுள்ளதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் - அதிமுக, திமுக
சொல்லி அடித்த அநுர குமரா திசநாயக! இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் புதிய வரலாறு படைத்த அதிபர் கூட்டணி!

மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி வேல்முருகன், “திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை. இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும்? இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இருதரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்” என தெரிவித்தார்.

court order
court orderpt desk

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சில் எந்த அவதூறு இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி, “ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதை இன்றைய நிலையாக கொண்டிருக்கிறது” என சுட்டிக் காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் - அதிமுக, திமுக
காஷ்மீர் விவகாரம் முதல் அயோத்தி வழக்கு வரை.. உருவாக்கிய நம்பிக்கைகளை பொய்யாக்கிவிட்டாரா சந்திரசூட்!?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com