“வானம் இடிந்து விழுந்து விடாது” - அதிமுக தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
madras high court
madras high courtpt desk
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார்
ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார்pt desk

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

இதையடுத்து வழக்கு இன்று பட்டியல் இடப்படாத நிலையில், மனுதாரர் தரப்பில் நீதிபதி வி.சுப்பராயன் முன் முறையிடப்பட்டது. அப்போது, “பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?” என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.

madras high court
யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது? “இபிஎஸ் உடன் விவாதிக்க தயார்” - உதயநிதி ஸ்டாலின்

மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், “நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்து விடாது. அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம்” என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com