சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை தாமதமாக கட்டிக் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.143 கோடியை வசூலிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை கட்டிக்கொடுக்க ரூ.2596 கோடி மதிப்புடைய ஒப்பந்தங்களை பெற்ற மும்பை மற்றும் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள் குறித்த காலத்தில் பணிகளை முடிக்காமல், 3 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தியதால் அவற்றின் வங்கி உத்தரவாதத்திஇருந்து ரூ.143.28 கோடியை எடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கி உத்தரவாதத்தில் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து, மும்பை மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து ஆகஸ்ட் 21க்குள் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால், வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.