கங்குவா: மீண்டும் மீண்டுமா? “மேலும் ரூ 1.60 கோடியை செலுத்தாமல் திரையிடக்கூடாது” - உயர்நீதிமன்றம்!

Fuel technologies என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் - ஸ்டூடியோ கிரீன் - கங்குவா
சென்னை உயர்நீதிமன்றம் - ஸ்டூடியோ கிரீன் - கங்குவாபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர் சுப்பையா

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உட்பட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த fuel technologies international private limited என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.

கங்குவா
கங்குவாட்ரைலர்

அதில் தானா சேர்ந்த கூட்டம் தவிர மற்ற இரண்டு படங்கள் தயாரிக்கபடாததால் ஐந்து கோடி ரூபாயை fuel technologies நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதம் உள்ள ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.

இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி fuel technologies நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - ஸ்டூடியோ கிரீன் - கங்குவா
“எதிர்கொள்வோம், எதிரி கொல்வோம்” - ‘கங்குவா’ ட்ரைலரில் உறுமும் சூர்யா!

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

கங்குவா படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி
கங்குவா படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி

இதனையடுத்து, “Fuel technologies நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்” என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, “பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது” எனவும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கங்குவா திரைப்படத்திற்கு காலை 9 மணி முதல் காட்சிகளை திரையிடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நேற்றைய தினம் மற்றொரு வழக்கில், 20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கு தொடர்பாக விரிவாக அறிய: ரூ 20 கோடியால் ‘கங்குவா’ படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் - ஸ்டூடியோ கிரீன் - கங்குவா
ரூ 20 கோடியால் ‘கங்குவா’ படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com