“காசு போடவில்லை என்றால் விபூதி கூட கிடைக்காது” - தீட்சிதர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்pt web
Published on

செய்தியாளர் சுப்பையா

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறை அதிகாரம் இல்லை. இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
“ஆளுநர் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதில் இருந்து முதல்வர் பின்வாங்க மாட்டார்” - அமைச்சர் சேகர்பாபு

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். நீதிமன்றம்தான் இதனை கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சுட்டி காட்டிய நீதிபதி, மனக்கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

நீதிபதி தீர்ப்பு...

மேலும் கூறிய நீதிபதி “தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல விஷயம் கிடையாது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம், சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
“குழந்தை திருமண தடை சட்ட செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்க முடியாது” உச்சநீதிமன்றம்

அதேபோல அங்கே காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகிவிடும். பக்தர்கள் வரும்வரைதான் கோவில்” என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் PT

இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
கேரளா | வயநாடு துயரம் ஓயாத தருணம்.. வயநாடு நிலச்சரிவு பேரிடர் இறுதிச் செலவுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com