மதுரையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.
மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும், மதுரைக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து 500இல் இருந்து 1000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், அதேபோல் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஓரிரு நாட்களில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல் அலையின்போது மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் இரண்டாம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.