கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் தேர்தலை நடத்துவதாக திமுகவினர் கேள்வி எழுப்பியதால், அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதனால், அவரது காரை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு இருந்த காவலர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.