தமிழக முதல்வராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜை நியமிப்பது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்ஜு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், எம்எல்ஏவாக சிறப்பாக செயல்பட்டு வருபவருமான நட்ராஜை முதலமைச்சராக்குவது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவுக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாகச் செயல்படும் நட்ராஜை முதல்வராக்கினால், அதை இருதரப்பினருமே ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் கட்ஜு, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.