சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேடும் குழுவின் தலைவராக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டுக்கொள்ளாமல் இருந்தவருக்கு இந்த பதவியை அளித்திருப்பது மோசமான முன்னுதாரணங்களில் ஒன்று என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதாக கூறி, தமிழக உயர்கல்வித்துறையிலும் காவிமயக் கொள்கையை புகுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநரே அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதாக வருத்தம் தெரிவித்த ஸ்டாலின், சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.