விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலை

விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலை
விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலை
Published on

நாமக்கல் மண்டலத்தில் சரிந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில்... தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடி மாதம் முடிந்த நிலையில், விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால், கேரளாவில் ஓணம் பண்டிகை, வட மாநிலங்களில் ஸ்வரன் பண்டிகையை ஒட்டி முட்டை நுகர்வு குறைந்து போனதால் கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் முட்டை விற்பனை மந்தமடைந்து அதிகளவு தேக்கம் ஏற்பட்டது.

எனவே முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலையை இன்று ஒரே நாளில் 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஓணம் பண்டிகை வரை முட்டை விலை நிலையற்றே காணப்படும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com