தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அதுபற்றிய விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் தீவிரமடைந்து நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை வழியாக தெற்கு ஆந்திராவை நோக்கி, இந்த காற்றழுத்த தாழ்வு நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அதனை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com