“மாஸ்க், அடையாள அட்டை இருந்தால்தான் மதுபானம் வழங்கப்படும்”: காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி

“மாஸ்க், அடையாள அட்டை இருந்தால்தான் மதுபானம் வழங்கப்படும்”: காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி
“மாஸ்க், அடையாள அட்டை இருந்தால்தான் மதுபானம் வழங்கப்படும்”: காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி
Published on

சென்னையிலிருந்து மதுபானம் வாங்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 16 கடைகள் மட்டுமே தான் மே 7ஆம் தேதி திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் - 10, வாலாஜாபாத் - 3, உத்திரமேரூர் - 3 ஆகிய கடைகள் மட்டுமே திறக்கப்படும் எனப்பட்டுள்ளது. குன்றத்தூர் வட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் சென்னை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என்பதால், அனைத்து கடைகளும் திறக்கப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோன்று திருப்பெரும்புதூா் வட்டங்களிலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் திறக்கப்படாது என கூறியுள்ளார்.

அத்துடன் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், தங்களது அடையாள அட்டையை (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை / ஸ்மார்ட் கார்டு) கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை காண்பித்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் மதுபானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 50 நபா்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்பட்ட பின்னரே அடுத்த 50 நபா்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர பிற பகுதிகளிலிருந்து, குறிப்பாக சென்னை பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறக்கப்படவுள்ள மதுபான கடைளுக்கு வரும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com