வாழ்வாதாரம் இழந்து நின்ற சாமானியர்கள் - உணவுப்பொட்டலங்களை வழங்கிய 1ம் வகுப்பு சிறுமி

வாழ்வாதாரம் இழந்து நின்ற சாமானியர்கள் - உணவுப்பொட்டலங்களை வழங்கிய 1ம் வகுப்பு சிறுமி
வாழ்வாதாரம் இழந்து நின்ற சாமானியர்கள் - உணவுப்பொட்டலங்களை வழங்கிய 1ம் வகுப்பு சிறுமி
Published on

கொரோனா ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உதவும் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுமியின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. 

தமிழகமெங்கும் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. அதன் காரணமாக கொரோனா பரவல் தடுக்கப்பட்டாலும், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் என்பது கேள்விகுறியாக நிற்கிறது.

அவர்களுக்கு உதவிவகையில் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த தன்னிகிராச் சேவையில் சிறுமி ஒருவரும் இணைந்துள்ளார்.ஆம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த செட்டியபட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ஷஷ்டிகாஸ்ரீ. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர் ஊரடங்கில் உணவில்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு பார்த்து அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியிருக்கிறார்.

 அதனை ஆமோதித்த அவரது தந்தையும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.  அந்த வகையில் நேற்றும் இன்றும் தலா 30 பேருக்கு சிறுமி தனது பொன்கரங்களால் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளார். சிறுமியின் இந்தச் செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com