தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழகத்தில் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு கோரிக்கை அனைத்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால், தமிழகத்தில் போராட்டம் இல்லை என லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். ஹைதராபாத்தில் லாரி காப்பீட்டு கட்டணம் குறித்து ஐஆர்டிஏ-வுடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் அதிலும் சுமூக தீர்வு ஏற்பட்டவுடன் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் லாரி உரிமையாளர்கள் என தெரிவித்தனர்.
இதன் பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.