வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி

வாணியம்பாடி அருகே மலைச்சாலையில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரி, ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிர்தப்பினர்.
வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி
வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரிpt desk
Published on

செய்தியாளர்: ஆர். இம்மானுவேல் பிரசன்னகுமார்

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு பருப்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணி பெண்டா மலைச்சாலையில் வந்து கொண்டிருந்த போது, மலைச்சாலையின் வளைவில் லாரி திரும்பியுள்ளது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, மலைச்சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி
வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரிpt desk

இதையடுத்து அந்த லாரி ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் அந்தரத்தில், தொங்கியபடி நின்றது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநரும், உதவியாளரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர்தப்பினர்.

வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி
“மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும்” - குக்கி சமூக மக்கள் பேரணி

இதையடுத்து அந்தரத்தில் தொங்கிய லாரியை பொதுமக்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்டு சாலையோரம் நிறுத்தி வைத்தனர். இந்த விபத்து குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com