கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும், இந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பகிரப்படுவதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகர் பிரசன்னா, நடராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேளச்சேரியில் கைது செய்துள்ளனர். ‘கந்த சஷ்டி கவசம்’ குறித்து அவதூறு பரப்பியதாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.