மக்களை ஏமாற்றவே கடைசி நேரத்தில் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை பாஜக தலைவர் அமித் ஷாவிடம் அடகு வைத்து விட்டதாகக் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போது ஊழல் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதாகப் பேசினார். பாதுகாப்புத் துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஸ்டாலின் சாடினார்.