லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவர் வெங்கட்ராமன் விசாரித்த வழக்குகள்!

லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவர் வெங்கட்ராமன் விசாரித்த வழக்குகள்!
லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவர் வெங்கட்ராமன் விசாரித்த வழக்குகள்!
Published on

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக் ஆயுக்தா. அதன்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் பங்கேற்று லோக் ஆயுக்தா தேர்வுக்குழு குறித்து ஆலோசித்தனர். விரைவில் தேடல்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் தேடுதல் குழுவின் உறுப்பினராக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும், ஒரு உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஏ.பாரியும் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆணையம் 5 பேர் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்

லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், விசாரித்த முக்கிய வழக்குகள்: 

  • சென்னை உயர்நீதி‌மன்ற நீதிபதியாக பணியாற்றிய கே.வெங்கட்ராமன் கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ‌
  • கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடைகோரி இஸ்‌லாமிய அமைப்புகள் தொ‌டர்ந்த வழக்குகளை விசாரித்தவர் வெங்கட்ராமன்
  • கும்பகோண‌ம் பள்ளி தீ விபத்தால் ‌பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு நிர்ணயம் செய்யும் பணியை இவரிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்திருந்தது. 
  •  இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்தலையும் இவர் நடத்தியுள்ளார் 
  •  கூட்டுறவு சங்க தேர்தலில் வடக்கு மண்டலங்களில் இருந்து வந்த புகார்களையும் இவர் விசாரித்துள்ளார்
  • மின்வாரியத்தை கணினிமயமாக்குவதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அமைத்த சமரச தீர்வு குழுவில் நவயுகா நிறுவன தரப்புக்காக இவர் நியமிக்கப்பட்டு இருந்தார். 
  • இதுதவிர புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் கே.வெங்கட்ராமன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com