மக்களவை தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024 முகநூல்
Published on

ஏப்ரல் 19 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள சூழலில் இன்று முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மக்களவை தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

அதன்படி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். மொத்தம் 16 வேட்பாளர்களின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி,

1) தென் சென்னை -ஜெயவர்தன்,

2) வடசென்னை- மனோகர்,

3) காஞ்சிபுரம் - ராஜசேகர்,

4) ஆரணி - கஜேந்திரன்,

5) விழுப்புரம் - பாக்கியராஜ்

6) அரக்கோணம் - ஏ.எல். விஜயன்

7) கரூர்- தங்கவேல்,

8) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்,

9) சிதம்பரம் - சந்திர ஹாசன்,

10) நாமக்கல் - தமிழ்மணி,

11) சேலம் - விக்னேஷ்,

12) ஈரோடு - ஆற்றம் அசோக்குமார்,

13) மதுரை - சரவணன்,

14) தேனி - வி.டி நாராயணசாமி,

15) சேலம் - விக்னேஷ்,

16) நாகை - சுர்ஜித் சங்கர்.

மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com