தனிமனித இடைவெளி இன்றி நிவாரண உதவிகள் : அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

தனிமனித இடைவெளி இன்றி நிவாரண உதவிகள் : அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு
தனிமனித இடைவெளி இன்றி நிவாரண உதவிகள் : அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு
Published on

ராமநாதபுரத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நிவாரண உதவிகள் வழங்கிய அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், முகக் கவசங்களை அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி ராமநாதபுரத்தின் கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி பகுதியில் மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.

புகாரின் பேரின் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட 4 பேர் மீது 144 தடை உத்தரவை மீறியது, தொற்று நோய் பரவும் விதமாக செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com