தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மத்திய அரசின் அறிவிப்பின் படி ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும். மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை தொடரும். போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ- பாஸ் தேவை. அண்டை மாநிலங்களுக்கு செல்ல தடை தொடர்கிறது. பேருந்துகளில் 60% இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஜூன் 8 ஆம் தேதி முதல் தேநீர் கடைகள்,உணவகங்கள், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மால்கள், பெரிய தங்கும் வகையிலான ஓட்டல்களுக்கு தடை நீடிக்கிறது. ஜுன் 1 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை காய்கறிக் கடைகள், உணவகங்கள்(பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.