பொது இடத்தில் குப்பை போடுறீங்களா? - இனி பண்ணாதீங்க...’Spot fine’ ல வசமா சிக்கிடுவீங்க!

சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம், அந்த இடத்திலேயே அபாராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
சென்னை
சென்னைமுகநூல்
Published on

சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம், அந்த இடத்திலேயே அபாராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

”தன் சுத்தம் பொது சுத்தம்” ..வீடுகளை தூய்மையாக வைக்கத்தெரிந்த நம்மில் பலருக்கு நாம் வசிக்கும் தெருக்களையும், அதன் அழகிய சாலைகளையும் தூய்மையாக வைத்திருக்க மனம் வருவதே இல்லை என்பதுதான் உண்மை..

வெளியில் சென்று அங்கு பிடித்ததை வாங்க முடிந்த மனிதர்களுக்கு, அதிலிருந்து வரும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணமும் எழுவதில்லை.

வெளிநாடுகளுக்கு சென்றால், ‘அங்க இருக்குற ரோடு சும்மா கண்ணாடி மாதிரி பளபளன்னு இருக்கும் தெரியுமா?” என்று வர்ணிக்கத் தெரிந்தவர்களுக்கு, இங்கு இருக்கும் சாலை ஓரங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்கான காரணத்தில் மனிதர்களின் அலட்சியமும் அடங்கும் என்று புரிவதுமில்லை.

அரசாங்கத்தின் சார்பில் குப்பைகளை பொது இடத்தில் வீசாமல் தடுக்கவும், அதனை சுத்தம் செய்யவும் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு கொண்டுதான் வருகின்றன. அந்தவகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 மில்லியன் ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுவதாக சென்னை மாநாகராட்சி தெரிவித்திருந்தது.

பொது இடங்கள், தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டட கழிவுகள் மற்றும் பல வகையான குப்பைகள் கொட்டுவதை தடுக்க, முன்னதாக விதிக்கப்பட்டிருந்த ரூ 500 என்ற அபராத தொகையை ரூ ,5000 ஆயிரம் என்று மாநகராட்சி உயர்த்தியும் இருந்தது.

தனிநபர் இல்லங்களில் கொட்டப்படும் குப்பைக்கு 100 ரூபாயாக இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 10 நாட்களில் மட்டும் விதிகளை மீறிய நபர்களுக்கு ரூ 2.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுள்ளது.

இந்தவகையில், மேலும் இதனை தீவிரப்படுத்தும் விதமாக , போலீசாரால் அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் கருவியை போலவே, குப்பை கொட்டும் விதிகளை மீறுபவர்களிடம் அதே ஸ்பாட்டில் அபராதம் வாங்க, புதிய டிஜிட்டல் கருவியை வாங்கியுள்ளது சென்னை மாநகராட்சி..

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, 500 கருவிகளை வாங்கியுள்ளதாகவும், இந்த கருவிகளை 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது விரைவில் நடைமுறையில் வரும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com