மாநிலத்தின் வருவாயை பெருக்க அனைத்து மதுபானங்கள் மீதான 5 சதவீத கூடுதல் வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சட்டமுன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தின் வருவாயை பெருக்கும் பொருட்டு, தமிழகத்தில் விற்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் மீதும் 5 சதவீதம் வரை கூடுதல் வரிவிதிக்க சட்டத்திருத்தம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இது சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 5 சதவீதம் வரை உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.