காஞ்சிபுரம்: 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை - பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம்: 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை - பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம்: 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை - பொதுமக்கள் அவதி
Published on

காஞ்சிபுரத்தில் பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் டாஸ்மாக் பாரை தாண்டி தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவார்கள். அந்த பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அவ்வழியே கடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மது விற்பனை தங்கு தடையின்றி தினமும் நடைபெற்று வருகிறது. சிலர் மது அருந்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தால் சம்பவ இடத்திற்கு வந்து கண்துடைப்புக்காக சிலரை பிடிகிறார்களே தவிர நிரந்தர தீர்வு காண்பதில்லை. ஆகவே இந்த பகுதியில் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் அடிதடி வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் கோனேரிக்குப்பம் ராஜாஜி மார்க்கெட் செவிலிமேடு ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் மதுபானம் கள்ளச்சந்தையில் அதிகாலையில் விற்பனை நடக்கிறது. எனவே காஞ்சிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மக்கள் நலன் கருதி கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com