"லில்லி மலர்களுக்கு கொண்டாட்டம்" - கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் பூக்கள்

"லில்லி மலர்களுக்கு கொண்டாட்டம்" - கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
"லில்லி மலர்களுக்கு கொண்டாட்டம்" - கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
Published on

மனதைக் கவரும் மணத்துடன், கண் கவரும் ஐந்து வண்ண லில்லியம் மலர்கள் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில், 2020 ஆண்டின் மலர்க்கண்காட்சிக்காக புதிய வகை லில்லியம் மலர்கள் பத்து வண்ணங்களில் வரவழைக்கப்பட்டு, வண்ணத்திற்கு நூறு செடிகள் என ஆயிரம் செடிகளை தொட்டிகளில் வைத்து வளர்த்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக தீவிர பராமரிப்பில் இருந்த இந்த மலர்ச்செடிகளில், வெள்ளை வண்ண மலர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூக்கத் தொடங்கியது. தற்பொழுது கூடுதலாக மஞ்சள், அடர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் மகர வண்ண லில்லியம் மலர்கள் மனதை மயக்கும் மணத்துடன், கண்கவர் வண்ணங்களில் பூத்து குலுங்கியுள்ளன.

ஒருமுறை மட்டும் பூத்து பின்னர் மடியும் செடி வகையை கொண்ட இந்த மலர்களைக் காண, சுற்றுலா பயணிகள் இல்லாதது வருத்தத்தை அளிப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com