அரசு மருத்துவமனையில் திடீரென பழுதான லிஃப்ட்: சிக்கியிருந்த குழந்தைக்கு என்ன ஆனது?

அரசு மருத்துவமனையில் திடீரென பழுதான லிஃப்ட்: சிக்கியிருந்த குழந்தைக்கு என்ன ஆனது?
அரசு மருத்துவமனையில் திடீரென பழுதான லிஃப்ட்: சிக்கியிருந்த குழந்தைக்கு என்ன ஆனது?
Published on

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'லிஃப்ட் பழுது ஏற்பட்டு மூன்றாவது மாடியில் சிக்கித் தவித்த குழந்தை உட்பட 4 பேரை மருத்துவமனை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில், நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில் லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரு குழந்தை உட்பட 4 பேர் தரைத்தளத்தில் இருந்து மூன்றாவது மாடிக்கு லிப்ட்டில் சென்றுள்ளனர். அப்போது மூன்றாவது மாடி அருகே லிப்ட் வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டு அந்தரத்தில் நின்றது. இதனால் உள்ளே இருந்த நான்கு பேரும் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து லிஃப்டை திறக்க முற்பட்டனர் ஆனால், திறக்க முடியாததால் வெல்டிங் கருவியின் உதவியோடு லிப்டின் கதவை வெட்டி உள்ளே இருந்து மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மருத்துவமனை கட்டடத்தில் அமைந்துள்ள லிஃப்ட் உள்ளிட்ட கருவிகளை மாதம் ஒருமுறையாவத ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com