தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை – நீதிமன்றம்

தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை – நீதிமன்றம்
தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை – நீதிமன்றம்
Published on

தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் தாயம் விளையாடிய போது, ஆனந்தன் என்பவரை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார். சில நாட்கள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த தனசேகரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆனந்தன், கத்தரிக்கோலால் மார்பில் குத்தியுள்ளார். இந்நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனசேகரை பரிசோதித்த மருத்துவர்கள், தனசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.அப்ரஹாம்லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com