காலம் மாறிப்போன இக்காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கென ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டன. ஆனால் ஒரு காலத்தில் மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் பயன்பட்ட போஸ்ட் பாக்ஸ்கள் இப்போது அதிகம் பயனற்றே இருக்கின்றன. இருந்தாலும் ஒருசிலருக்காக இன்னும் அதன் பயன்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள பல போஸ்ட் பாக்ஸ்களில் லெட்டர்களை விட திருடர்களால் போடப்பட்ட காலி பர்ஸ்களே இருந்துள்ளன. சென்னையில் மட்டும் 216 தபால் அலுவலகங்களும், சுமார் 2000-க்கும் அதிகமான போஸ்ட் பாக்ஸ்களும் உள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னையில் உள்ள போஸ்ட் பாக்ஸ்களில் இருந்து சுமார் 70-க்கும் அதிகமான அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது பிக்பாக்கெட் கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் பர்ஸ்களில் இருந்து பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பர்ஸை போஸ்ட் பாக்ஸ்களில் வீசி செல்கின்றனர். இதனால் கொள்ளையடிக்கப்பட்ட நபர்களின் அடையாள அட்டைகள் போஸ்ட் பாக்ஸ்களில் இருந்து மீட்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி சிலர் வழிகளில் தங்களது அடையாள அட்டைகளை தவறவிட்டு விடுகின்றனர். அதனை கண்டெடுக்கும் சிலரும் நல்ல நோக்கில் அதனை போஸ்ட் பாக்ஸ்களில் போடுகின்றனர். இதுதவிர இரண்டு பாஸ்போர்ட்களும் போஸ்ட் பாக்ஸில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தபால் அலுவலக உயரதிகாரி ஒருவர் கூறும்போது, போஸ்ட் பாக்ஸ்களில் இருந்து கண்டெடுக்கப்படும் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுகின்றன என தெரிவித்தார்.
Courtesy: TheTimesOfIndia