ஆசிரியர்கள் போராட்டத்துக்கான கோரிக்கைகள்தான் என்னென்ன ?

ஆசிரியர்கள் போராட்டத்துக்கான கோரிக்கைகள்தான் என்னென்ன ?
ஆசிரியர்கள் போராட்டத்துக்கான கோரிக்கைகள்தான் என்னென்ன ?
Published on

ஜாக்டோ ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊழியர் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும், முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது. 

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
2003 மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரி‌யர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் , 5 ஆயிரம் அரசு பள்ளிக‌ளை மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளன. 

3 ஆயிரத்து 500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு‌ மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசியர்கள் பணிமாற்றம் செய்வதை‌ ரத்து செய்ய வேண்டும் என்பதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கையாக இருக்கி‌றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com