தேனி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

தேனி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
தேனி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள போலீஸ் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது கைலாசபட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி,, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். அதோடு இந்த கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் புழக்கமும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்த கோவில் அருகே மலையும் மலை சார்ந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ உண்மையானது என உறுதி செய்தனர்.

இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com