தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்து பேசுகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்த நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுக - பாஜகவிற்கு இடையே சலசலப்புகள் இருந்த நிலையில், அண்மையில் தமிழகம் வந்த அமித் ஷா கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி மற்றும் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்கின்றனர்.இந்தச் சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இருக்கும் எனத் தெரிகிறது.