ஈரோடு மாவட்டம் நரிப்பள்ளத்தில் தோல் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டதை அடுத்து 4 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் நரிப்பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரில் தோல் கழிவுகள் கலந்து வருவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்தது. அது குறித்து செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரபாகர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் நர்மதா தேவி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 4 தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்காமல் கழிவுகளை வெளியேற்றுவது தெரியவந்தது. அதையடுத்து, அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் தற்காலிகமாக துண்டித்தனர்.