தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்த நிலையில் அடுத்த கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மேலும் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் குறித்து அண்மையில் மாநில மைய குழு கூட்டத்தில் பேசப்பட்டது. விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வர உள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமிர்ந்தமான சந்திப்பு என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதே போல டெல்லி சென்றுள்ள பாஜக மாநில துணை தலைவர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசனும் டெல்லியில் உள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் சொத்து வரி உயர்வு இவ்வளவா? - முழு விவரம்