மகளிர் ஆணைய தலைவர், கலாஷேத்ரா இயக்குநர்
மகளிர் ஆணைய தலைவர், கலாஷேத்ரா இயக்குநர்PT Desk

கலாஷேத்ரா இயக்குநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்னென்ன கேட்கப்பட்டது? - மகளிர் ஆணைய தலைவர் விரிவான விளக்கம்

கலாஷேத்ரா இயக்குநரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும், மாணவிகளிடம் பேசப்பட்டதா? என்பது குறித்தும் மகளிர் ஆணைய தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
Published on

கலாஷேத்ரா இயக்குனரிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரனை நடத்தப்பட்ட நிலையில், அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன? மாணவிகளிடம் பேசப்பட்டதா? என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்பது குறித்து செந்தியாளார்களிடம் விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு மகளிர் ஆணையர் தலைவர் குமரி.

முன்னதாக, செய்தியாளார்களின் சந்திப்பில் குமரி பேசிய பொழுது, “கலாஷேத்ரா நிர்வாக இயக்குநரை தொலைபேசி வாயிலாக நாங்கள் தொடர்பு கொண்டு, மகளிர் ஆணையத்திற்கு வரவழைத்தோம். அதற்கு காரணம், நாங்கள் கலாஷேத்ரா சென்ற சமயம் அங்கு இயக்குநர் இல்லை. ஆகவே அவர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, அங்குள்ள ஐசிசி கமிட்டி எப்படி செயல்படுகிறது, என்பது பற்றியும் அதில் உள்ள ஐந்து உறுப்பினர்களின் விவரம், மற்றும் அங்கு பயிலும் மாணவிகளுக்கு ஐசி கமிட்டியின் புரிதல் என்ன? மேலும், மாணவிகளின் பாதுகாப்பு முதலியவற்றை தெரிந்துக்கொள்வதற்காக கேட்டோம். தவிரவும் புகாரளித்த மாணவிகள் தேர்வுகளில் பங்கேற்பது குறித்தும் பேசினோம்”

”கடந்த பத்தாண்டுகளில் ஐசிசி கமிட்டியில் வந்துள்ள புகாரையும் தெரிவிக்கும் படி கேட்டுள்ளோம். இது குறித்து மாணவிகளிடமும் நிர்வாகத்திடமும் பேசி உள்ளோம். நிர்வாகமும் நாங்கள் கேட்ட ஆவணங்களை தருவதாக கூறியுள்ளனர். மேலும் குற்றம் சாடியுள்ள மூன்று பெண்களை வளாகத்துக்குள் அணுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளேன்.” என்று கூறியுள்ளார் மகளிர் ஆணையத்தலைவர் குமரி அவர்கள்.

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com