தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பணபலம் இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை நடைபெற உள்ள கடையடைப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், “போராடுபவர்களை விலைக்கு வாங்குவதே ஸ்டெர்லைட் நிர்வாகம் காலம் காலமாக கடைபிடித்து வரும் அணுகுமுறை. போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என்றே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை உடன் வைத்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் ஸ்டெர்லைட் ஆலையின் பணபலம் தான் இருந்துள்ளது. கண்டித்து நாளை நடைபெற உள்ள கடையடைப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டும்” என்றார்.