ஓசூர்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு... குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

ஓசூரில் பயிற்சி வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்படும் வழக்கறிஞர்
தாக்கப்படும் வழக்கறிஞர்pt web
Published on

செய்தியாளர் ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு அவர் வெளியே வரும் பொழுது மர்மநபர் ஒருவர் அவரை பட்டப்பகலிலேயே கண்மூடித்தனமாக சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

தாக்கப்படும் வழக்கறிஞர்
மனிதம் எங்கே இருக்கிறது? இரண்டு மாதங்களில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகள்!

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விசாரணையில் கண்ணனைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபர் ஆனந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் பக்கத்தில் உள்ள JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனால் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com