மீனவர்களின் கருத்தை கேட்ட பின்பே மசோதா நிறைவேற்றம் - எல்.முருகன்

மீனவர்களின் கருத்தை கேட்ட பின்பே மசோதா நிறைவேற்றம் - எல்.முருகன்
மீனவர்களின் கருத்தை கேட்ட பின்பே மசோதா நிறைவேற்றம் - எல்.முருகன்
Published on

மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீனவள மசோதா 2021 நிறைவேற்றப்படும் என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எம். முருகன் தெரிவித்திருக்கிறார்.

மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என நெல்லையில் அவர் அளித்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியபோது, "மசோதாவின் சரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம். பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீனவள மசோதா 2021 நிறைவேற்றப்படும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளின் கட்டுமான நிறுவனத்தை தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com