மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.
இரு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் பஞ்சாப் சென்றபோது, அவருக்கு போதிய பாதுகாப்பை அந்த அரசு வழங்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆளுநரிடம் கடிதம் ஒன்றை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கொடுத்தார். அதைத்தொடர்ந்து முருகனும் இன்று ஆளுநரை சந்தித்திருக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், தமிழகத்தின் மத்திய பிரதிநிதியாக முருகன் இருப்பதால் நீட் விவகாரம் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்த நீட் தேர்வுக்கான திருத்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார் இந்த நிலையில் எல்.முருகன் ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.