தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்
Published on

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தமிழிசை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின்னர், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கான இடம் காலியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவர். சட்டப்படிப்பில் பிஹெச்டி முடித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com